சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அகச்சந்தான குரவர்கள்
அகச்சந்தான குரவர்கள் என அழைக்கப்படும் நான்கு குருமார்களும் கயிலாயத்தில் வாழும் கயிலாய பரம்பரையினர் ஆவார். எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய நம்பெருமான் ஈசனே சிவாகமத்தை நேரடியாகத் திருநந்திதேவர் அவர்களுக்கு உபதேசித்து அருளியவர்.
"நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்
1. திருநந்திதேவர்
2. சனற்குமாரர்
3. சத்தியஞான தரிசினிகள்
4. பரஞ்சோதியார்
நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment