சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருமுறை அருளாளர்கள் - 3
திருமுறை அருளாளர்கள் இருபத்தி எழுவரில் முதல் 8 திருமுறைகளை அருளியர்வர்கள் சமயகுரவர்களாகிய,
திருஞானசம்பந்தர் (திருக்கடைக்காப்பு எனப்போற்றப்படும்முதல் மூன்று திருமுறைகள்),
திருநாவுக்கரசர் ( தேவாரம் எனப்போற்றப்படும் 4,5,6 வது திருமுறைகள் ),
தம்பிரான் தோழனாகிய சுந்தரர் (திருப்பாட்டு எனப்போற்றப்படும் 7 வது திருமுறை),
திருவாதவூராகிய மாணிக்கவாசகர் (தெய்வ திருவாசகமும் அருள்திரு திருக்கோவையார்
ஆகியவையும் 8 ஆம் திருமுறை)
ஆகியோரின் அருள் சரிதங்களையும் அற்புதங்களையும் நாம் முந்தைய பதிவுகளில் சிந்தனை செய்துள்ளோம்.
திருமுறைகளை தொகுத்து வழங்கிய தமிழ் வேத வியாசர் என போற்றப்படும் நம்பியாண்டார் நம்பி மற்றும் நமக்கெல்லாம் அடியார்களின் பெருமைகளை விவரித்து கூறி பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை அருளிய தெய்வ சேக்கிழார் பற்றியும் முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம்.
இனி திருமுறை வாரியாக ஒவ்வொருவராக சிந்தனை செய்வோம்.
ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு அருளிய ஒன்பது அருளாலர்களில்,
- திருமாளிகைத் தேவர்,
- சேந்தனார்,கருவூர்த்
- தேவர்,பூந்துருத்தி
- நம்பிகாடநம்பி,
- கண்டராதித்தர்,
- வே
ணாட்டடிகள், - திருவாலியமுதனார்,
- புருடோத்தம நம்பி,
- சேதிராயர்
நாம் முதலில் சிந்திக்க இருப்பது திருமாளிகைத் தேவர்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment