திருச்சிற்றம்பலம்
திருமுறைக அருளாளர்கள்
ஒப்பிலா பெருமைகையுடைய கிடைத்தற்கரிய பொக்கிசங்கள் ஆகிய திருமுறைகளை அருளிய அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம்.
குறிப்பு - 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகளை அருளிய அருளாளர்கள்:
முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
நான்காம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசு நாயனார்
ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார்
எட்டாம் திருமுறை
மாணிக்கவாசகர்
ஒன்பதாம் திருமுறை - 9 ஆசிரியர்கள்
1. திருமாளிகை தேவர்
2. கண்டராதித்தர்
3. வேணாட்டடிகள்
4. சேதிராசர்
5. பூந்துருத்தி நம்பிகாடநம்பி
6. புருடோத்தம நம்பி
7. திருவாலியமுதனார்
8. சேந்தனார்
9. கருவூர்த்தேவர்
பத்தாம் திருமுறை
திருமூலர்
பதினொன்றாம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
1. திருவாலவாயுடையார்
2. கல்லாடதேவ நாயனார்
3. அதிராவடிகள்
4. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
5. இளம்பெருமான் அடிகள்
6. பரணதேவ நாயனார்
7. சேரமான் பெருமான் நாயனார்
8. கபிலதேவ நாயனார்
9. காரைக்கால் அம்மையார்
10. பட்டினத்துப் பிள்ளையார்
11. நக்கீர தேவ நாயனார்
12. நம்பியாண்டார் நம்பி
பன்னிரண்டாம் திருமுறை
தெய்வ சேக்கிழார்
நாம் அனைவரும் முன்னதாக திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி நாயனார்,மாணிக்கவாசகர் மற்றும் பிறப்பிலா பெருமானே அம்மையே என அழைத்த காரைக்கால் அம்மையார் ஆகியோர்களை பற்றி சிந்திதுள்ளோம்.
இனி வரும் நாட்களில் திருமுறை அருளாளர்களை ஒவ்வொவொரு வராக சிந்தனை செய்வோம்.
திருமுறைகளை தினமும் ஓதி உணர்ந்து அருளாளர்கள் பெற்ற பேரின்ப பேரு வாழ்வை நாமும் பெற முயற்சி செய்வோம்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment